செய்திகள்
ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் சதம் அடித்த டெல்லி வீரர் த்ருவ் ஷோரோ

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி: த்ருவ் ஷோரே சதத்தால் நிமிர்ந்தது டெல்லி; முதல் நாளில் 271/6

Published On 2017-12-29 12:52 GMT   |   Update On 2017-12-29 12:52 GMT
ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் த்ருவ் ஷோரே சதத்தால் விதர்பாவிற்கு எதிராக டெல்லி அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்துள்ளது. #RanjiTrophy
இந்தியாவின் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இதில் டெல்லி - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ரஞ்சி டிராபி வரலாற்றில் முதன்முறையாக விதர்பா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

டாஸ் வென்ற விதர்பா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் சண்டேலா, காம்பீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சண்டேலா ரன்ஏதும் எடுக்காமல் 5-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து த்ருவ் ஷோரே களம் இறங்கினார். அனுபவ வீரர் காம்பீர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பந்த், நிதிஷ் ராணா தலா 21 ரன்களில் வெளியேறினார்கள்.

இதனால் டெல்லி அணி 99 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷோரே உடன் ஹிமாத் சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டது.


இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆதித்யா தாகரே

ஹிமாத் சிங் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஷோரே நிலையாக நின்று சதம் அடித்தார். அத்துடன் அணியின் ஸ்கோர் உயர வேண்டும் என்று நிலைத்து நின்று விளையாடினார். அடுத்து வந்த மனன் ஷர்மா 13 ரன்களில் வெளியேறினார்.

7-வது விக்கெட்டுக்கு ஷோரா உடன் விகாஷ் மிஸ்ரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். டெல்லி அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.

ஷோரே 123 ரன்களுடனும், விகாஸ் மிஸ்ரா 5 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். நாளைய 2-வது நாள் ஆட்டத்தில் கடைநிலை வீரர்களை வைத்துக் கொண்டு ஷோரே நிலைத்து நின்ற விளையாடினால் டெல்லி 350 ரன்கள் சேர்க்க வாய்ப்புள்ளது.

விதர்பா அணியில் ஆதித்யா தாகரே, குர்பானி தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News