செய்திகள்

நாங்கள் நூறு சதவீதம் நாட்டிற்காகவே விளையாடுகிறோம்: விராட் கோலி

Published On 2017-12-27 18:13 GMT   |   Update On 2017-12-27 18:13 GMT
நாங்கள் நூறு சதவீதம் நாட்டிற்காகவே விளையாடி வருகிறோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. ஜனவரி 28-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. இதில் ஒரு போட்டியை தவிர மற்ற 5 ஆட்டங்களும் பகல்-இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி புறப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் விராட் கோலி பேசியதாவது:

கிரிக்கெட் என்னுடைய ரத்தத்தில் ஊறி உள்ளது. யாராவது ஏதாவது ஒன்றை நிரூபிப்பதற்கு நாங்கள் வெளியே போகவில்லை. நாங்கள் நூறு சதவீதம் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடவே செல்கிறோம்.

இதுபோன்ற முயற்சிக்கு சில சமயங்களில் அணிக்கு பலன்கள் கிடைக்கும். சில சமயங்களில் அந்த பலன்கள் கிடைப்பதில்லை.

நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டுமே செல்கிறோம். அது தென்னாப்பிரிக்காவா, ஆஸ்திரேலியாவா, இங்கிலாந்தா அல்லது இந்தியாவா என்பதை நாங்கள் பார்ப்பதில்லை.

இதுபோன்ற தொடர்கள் இளைஞர்களுக்கு அவர்களது திறமைகளை வெளிப்படுத்த உதவும் நல்ல வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News