செய்திகள்

பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டியில் சிட்னி தண்டரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்

Published On 2017-12-27 17:40 IST   |   Update On 2017-12-27 17:40:00 IST
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது.

பிரிஸ்பேன்:

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி  தொடங்கியது. இன்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதின. மழை குறுக்கிட்டதால் இப்போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிட்னி அணி 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. சிட்னி அணியில் ஷேன் வாட்சன் 56 ரன்களும், கலம் பெர்க்யூசன் 37 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்தனர். பிரிஸ்பேன் அணி தரப்பில் சதப் கான், ஜோஷ் லாலர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.



பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. பிரிஸ்பேன் அணி 16.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ பர்ன்ஸ் 45 ரன்களும், ஜிம்மி பியர்சன் 43 ரன்களும், கிறிஸ் லின், அலெக்ஸ் ரோஸ் ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். சிட்னி அணி தரப்பில் மிட்செல் மெக்லினகன் 2 விக்கெட்களும், ஷேன் வாட்சன், அர்ஜீன் நாயர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 



பிரிஸ்பேன் ஹீட் அணியின் அலெக்ஸ் ரோஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

Similar News