செய்திகள்
பேட்டிங் சாதனைகள் அனைத்தையும் கோலி முறியடிப்பார்: யூனிஸ்
இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் சாதனைகள் அனைத்தையும் முறியடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். அவர் இதே போன்று தொடர்ந்து விளையாடி, உடல்தகுதியை தக்க வைத்து, தனது ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து செயல்படுவாரே என்றால், வருங்காலங்களில் பேட்டிங்கில் உள்ள எல்லா சாதனைகளையும் உடைத்து விடுவார்’ என்றார்.
சச்சின் தெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோரை ஒப்பிட்டு பேசிய வக்கார் யூனிஸ், ‘தெண்டுல்கரை போன்று அர்ப்பணிப்புடன் விளையாடிய வீரரை பார்த்ததில்லை. எனது பந்து வீச்சை எதிர்கொண்டவர்களில் தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன்’ என்றார். பிரையன் லாராவிடம் இயற்கையாகவே திறமை உண்டு. தனக்குரிய நாளாக அமையும் போது எந்த பந்து வீச்சையும் துவம்சம் செய்து விடுவார் என்றும் வக்கார் யூனிஸ் கூறினார்.