செய்திகள்

எல் கிளாசிகோ போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்பாரா?

Published On 2017-12-21 20:26 IST   |   Update On 2017-12-21 20:26:00 IST
லா லிகா தொடரில் எல் கிளாசிகோ போட்டியான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்பெயினில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ‘லா லிகா’ கால்பந்து லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ டி மாட்ரிட் போன்ற அணிகள் விளையாடி வருகின்றன.

குறிப்பாக பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்தது. இந்த போட்டி வருகிற சனிக்கிழமை (23-ந்தேதி) நடக்கிறது. பார்சிலோனா- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்று இதை ரசிகர்கள் பார்ப்பதில்லை. மெஸ்சி - கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இடையிலான போட்டி என்றுதான் பார்ப்பார்கள்.



இந்த போட்டிக்காக இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரொனால்டோ இன்று காலை பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் எல் கிளாசிகோ போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை ரொனால்டோ விளையாடவில்லை என்றால் அது ரியல் மாட்ரிட் அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும்.

Similar News