செய்திகள்
கோல் அடித்த கொண்டாட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினர்

உலக கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியா அணி தகுதி

Published On 2017-11-16 10:19 IST   |   Update On 2017-11-16 10:19:00 IST
ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.
டப்ளின்:

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் ஜூன் 14-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கும். போட்டியை நடத்தும் ரஷியா தவிர எஞ்சிய 31 அணிகளும் தகுதி சுற்று போட்டிகள் மூலமே தான் நுழைய முடியும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நேற்று நடந்த ‘பிளே-ஆப்’ சுற்றின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஹோண்டுராஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின் பாதியில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இதுவரை 31 அணிகள் தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கான ஆட்டத்தில் நியூசிலாந்து-பெரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். 

Similar News