செய்திகள்

வங்காளதேச பயிற்சியாளர் ராஜினாமா

Published On 2017-11-10 10:52 IST   |   Update On 2017-11-10 10:52:00 IST
வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரிகா ஹதுருசின்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரிகா ஹதுருசின்கா (இலங்கையை சேர்ந்தவர்), தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி உள்ளார். ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பது குறித்து கடிதத்தில் எதுவும் அவர் குறிப்பிடவில்லை.

அவரை இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் எதிரொலியாகவே அவர் வங்காளதேச பயற்சியாளர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

Similar News