செய்திகள்

62 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வரி ஏய்ப்பு: நெய்மருக்கு 1.19 மில்லியன் அபராதம்

Published On 2017-10-20 12:37 GMT   |   Update On 2017-10-20 14:16 GMT
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான நெய்மர் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசில் கோர்ட்டு 1.19 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்துள்ளது.
பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களான மெஸ்சி, ரொனால்டோவுடன் இணைந்து கருதப்படும் நெய்மர் சம்பளம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

மேலும், விளம்பரங்கள், தனது படங்களை பயன்படுத்துதலுக்கான உரிமை போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கிறார்.



இப்படி சம்பாதித்ததில் 62 மில்லியன் அமெரிக்க டாலர் அளிவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் பிரேசில் நீதிமன்றம் நெய்மருக்கு 2 சதவீதம் என்ற அடிப்படையில் 1.19 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்துள்ளது.
Tags:    

Similar News