செய்திகள்

ரஞ்சி டிராபி: இரட்டை சதம், 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா

Published On 2017-10-16 14:22 GMT   |   Update On 2017-10-16 14:22 GMT
ரஞ்சி டிராபியில் ஜம்மு&காஷ்மீர் அணிக்கெதிரான சவுராஷ்டிரா அணியின் ரவீந்திர ஜடேஜா இரட்டை சதம், 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ரஞ்சி டிராபியில் ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் சவுராஷ்டிரா - ஜம்மு&காஷ்மீர் அணிகள் மோதின. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜடேஜா இடம்பெறவில்லை. இதனால் சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா இடம்பிடித்திருந்தார்.

சவுராஷ்டிரா அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜாக்சன் உடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜாக்சன் 181 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஜடேஜா சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 201 ரன்னில் ஆட்டம் இழந்தார். 313 பந்தில் 23 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை சேர்த்தார். ஜாக்சன் 156 பந்தில் 22 பவுண்டரி, 7 சிக்சர்கள் விளாசினார். இவர்களுக்கு அடுத்து வந்த எஸ்.எஸ். பட்டேல் 94 ரன்கள் சேர்க்க 135 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 624 ரன்கள் எடுத்து சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் ஜம்மு- காஷ்மீர் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜடேஜாவின் அபார பந்து வீச்சால் ஜம்மு&காஷ்மீர் முதல் இன்னிங்சில் 156 ரன்னில் சுருண்டது. ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



 468 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜம்மு&காஷ்மீர் 256 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் சவுராஷ்டிரா இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 3 விக்கெட்டும், ஜிப்ரஜானி 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்திய அணியால் புறக்கணிக்கப்பட்ட ஜடேஜா இரட்டை சதம் அடித்ததுடன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
Tags:    

Similar News