செய்திகள்

சுழற்பந்து வீச்சில் நியூசிலாந்து ‘ஏ’ அணியை 147 ரன்னில் சுருட்டியது இந்தியா ‘ஏ’

Published On 2017-09-23 12:51 GMT   |   Update On 2017-09-23 12:51 GMT
இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான போட்டியில் கரண் சர்மா, நதீம் ஆகியோரின் சுழற்பந்து வீச்சில் நியூசிலாந்து ‘ஏ’ அணி 147 ரன்னில் சுருண்டது.
இந்தியா ‘ஏ’ - நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி விஜயவாடாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி வொர்க்கர் - ராவல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். 72 ரன்னாக இருக்கும்போது தொடக்க ஜோடி பிரிந்தது. வொர்க்கர் 33 ரன்னிலும், ராவல் 34 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்



அதன்பின் நியூசிலாந்தின் விக்கெட் மளமளவென சரிந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் நதீம் மற்றும் கர்ண் சர்மா ஆகியோரின் பந்து வீச்சில் நியூசிலாந்து ‘ஏ’ 147 ரன்னில் சுருண்டது. கேப்டன் நிக்கோல்ஸ் (5), யங் (0), பிளண்டெல் (1), ஆஸ்லே (0), குக்கெலைன் (17), சோதி (0), ஹென்றி (14), பெர்குசன் (0) விரைவில் ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் செய்பெர்ட் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கரண் சர்மா, நதீம் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ‘ஏ’ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Tags:    

Similar News