செய்திகள்

கவுன்டி கிரிக்கெட்டில் 2017-ல் மட்டும் 8 சதங்கள் விளாசி சங்ககரா அசத்தல்

Published On 2017-09-21 11:33 GMT   |   Update On 2017-09-21 11:34 GMT
இலங்கை அணியின் முன்னாள் நடசத்திர வீரரான சங்ககரா 2017-ல் மட்டும் இங்கிலாந்து கவுன்டி போட்டியில் 8 சதங்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சங்ககரா. 39 வயதாகும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொழும்பில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் 2017-ம் ஆண்டு வரை விளையாடுவேன் என்று அறிவித்தார். அதன்படி இந்த வருடத்துடன் சங்ககராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

சங்ககரா இங்கிலாந்தின் சுர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடம் அவருக்கு பொற்காலம் என்றே கூறலாம். இதற்கு முன்பு ஐந்து இன்னிங்சில் தொடர்ந்து சதம் அடித்து சாதனைப் படைத்தார்.



தற்போது தொடர்ந்து மூன்று சதங்கள் விளாசியுள்ளார். சுர்ரே - சோமர்செட் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் சுர்ரே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் சேர்த்திருந்தது.

சங்ககரா 119 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்த சதம் மூலம் சங்ககரா இந்த வருடத்தில் 76, 46, 136, 105, 114, 120, 200, 84, 4, 26, 180, 164, 119 (நாட்அவுட்) ரன்கள் குவித்துள்ளார்.
Tags:    

Similar News