செய்திகள்

பார்சிலோனாவிற்காக மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை

Published On 2017-09-11 12:05 GMT   |   Update On 2017-09-11 12:05 GMT
லா லிகாவில் எஸ்பான்யல் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்ததன் மூலம் பார்சிலோனாவிற்கு மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
லா லிகா தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா - எஸ்பான்யல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பார்சிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக நட்சத்திர வீரர் மெஸ்சி அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் 26, 35 மற்றும் 67-வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்தார். இதன்மூலம் பார்சிலோனா அணிக்காக அவர் 38 முறை ஹாட்ரிட் கோல்கள் அடித்துள்ளார். இதில் யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் தொடரில் 7 முறை அடித்த ஹாட்ரிக் கோல்களும் அடங்கும்.



87-வது நிமிடத்தில் சக வீரர் பிக்காய் ஒரு கோலும், 90-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோலும் அடிக்க பார்சிலோனா 5-0 என அபார வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது பார்சிலோனா.
Tags:    

Similar News