செய்திகள்

ஹெட்லிங்லே டெஸ்ட்: சாய் ஹோப் அதிரடியால் வெஸ்ட்இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2017-08-29 19:20 GMT   |   Update On 2017-08-29 19:20 GMT
இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

லீட்ஸ் :

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 258 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 427 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. 

இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி, 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கிறிஸ்வோக்ஸ் 61 ரன்னுடனும், ஸ்டூவர்ட் பிராட் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதனை அடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை ஆடியது.

போட்டியின் கடைசி நாளான இன்று, இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட்இண்டீஸ் அணி, ஐந்து விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கிரேக் பிரத்வெய்ட் 95 ரன்கள் எடுத்தார். சாய் ஹோப் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதிசெய்தார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த சாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமன் செய்துள்ளன. கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 7-11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Tags:    

Similar News