செய்திகள்

இந்திய அணிக்காக விளையாடுவதை விட மிகப்பெரிய திருப்தி ஏதுமில்லை: முரளி விஜய்

Published On 2017-07-02 13:43 GMT   |   Update On 2017-07-02 13:43 GMT
இந்திய அணிக்காக விளையாடுவதை விட மிகப்பெரிய திருப்தி ஏதுமில்லை என்று டெஸ்ட் அணி தொடக்க வீரர் முரளி விஜய் கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முரளி விஜய். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின்போது அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் விளையாடிய அவர், தரம்சாலாவில் நடைபெற்ற கடைசி போட்டிக்குப்பின் லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

தற்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர், இலங்கை தொடரில் இடம்பிடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

இந்நிலையில் பணம் முக்கியம்தான், ஆனால், அதுவே எல்லாம் ஆகிவிட முடியாது என்று முரளி விஜய் கூறியுள்ளார். இதுகுறித்து முரளி விஜய் கூறுகையில் ‘‘இந்திய அணிக்காக விளையாடுவதை விட மிகப்பெரிய திருப்தி வேறு ஏதுமில்லை. மற்ற எல்லாத்தையும் விட இந்திய அணிக்காக வெள்ளை நிற உடை அணிந்து விளையாடும் வாய்ப்பை பெறும்போது பெருமையடைகிறேன்.

பணம் முக்கியம்தான். ஆனால், அதுவே எல்லாம் என்று ஆகிவிடாது. நமக்கு நாமே நேர்மையாக இருக்க வேண்டும். நாட்டிற்கு ஒரு இக்கட்டான நிலை வரும்போது, நம்முடைய கரம் கொண்டு உயர்த்தி பிடிக்க வேண்டும்.



இந்திய அணிக்காக வெள்ளை நிற ஆடை அணிந்து விளையாடும் வாய்ப்பை பெற்றது மிகப்பெரிய பெருமை. இந்திய அணிக்காக விளையாடியதை விட மிகப்பெரிய திருப்தி வேறு ஏதுமில்லை. இந்த எண்ணம்தான், காயத்தை புறந்தள்ளி வைத்துவிட்டு, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட உத்வேகம் அளித்தது.

ஆபரேசன் முடிந்தபின், இரண்டு மாதமாக இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக முன்னோக்கிச் சென்றுள்ளேன். இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக ஐ.பி.எல். தொடரில் இருந்து மிஸ் செய்தேன். இந்திய அணிக்காக நான் விளையாடி வரும் டெஸ்ட் போட்டிகள் கடைசியான ஆட்டம். வெளிநாட்டு மண்ணில் விளையாடுவதை விட இது கடினமானது’’ என்றார்.
Tags:    

Similar News