செய்திகள்

பாகிஸ்தானிடம் இந்தியா 180 ரன்னில் தோற்றது குறித்து விசாரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்

Published On 2017-07-01 12:42 GMT   |   Update On 2017-07-01 12:42 GMT
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து விசாரணை நடத்த மத்திய மந்திரி வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஐ.சி.சி.யால் நடத்தப்படும் 50 ஓவர் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்ரீட்சை நடத்தியது. இதில் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

கம்பீரமான இந்திய அணி இறுதிப் போட்டியில் படுதோல்வி அடைந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சித் தலைவரும், மத்திய இணை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.



இதுகுறித்து ராம்தாஸ் அத்வாலே கூறுகையில் ‘‘வலுவான அணி தனக்கு பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான 180 ரன்கள் வித்தியாசத்தில் எப்படி தோற்க முடியும்? அதிர்ச்சி தோல்வியடைந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும். தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த வலுவான இந்தியா, இறுதிப் போட்டியில் மட்டும் எப்படி 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய முடியும்?’’ என்றார்.
Tags:    

Similar News