செய்திகள்

பெண்கள் உலகக்கோப்பை: பாகிஸ்தானுடன் இந்தியா நாளை பலப்பரீட்சை

Published On 2017-07-01 15:51 IST   |   Update On 2017-07-01 15:51:00 IST
பெண்கள் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் நாளைய போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பெண்கள் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இத்தொடர் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் கடந்த 29-ந்தேதி வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. இதில் இந்திய வீராங்கனை மந்தனா 108 பந்தில் 106 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்தியா தான் சந்தித்த முதல் இரண்டு போட்டியிலும் வெற்றியை ருசித்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் தான் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.



இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளதால் இந்திய வீராங்கனைகள் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் வீராங்கனைகள் விளையாடுவதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News