செய்திகள்

பும்ப்ராவின் நோ-பாலால் 3 ரன்னில் இருந்து தப்பிய பகர் சமான் சதம் அடித்தார்

Published On 2017-06-18 17:40 IST   |   Update On 2017-06-18 17:40:00 IST
பும்ப்ராவின் நோ-பாலால் 3 ரன்னில் இருந்து தப்பிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் அசார் அலி, பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

4-வது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பகர் சமான் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்காமல் பும்ப்ராவின் கால் க்ரீஸை தாண்டி சென்றதாக சந்தேகம் இருக்கிறது என ரீப்ளே கேட்டார்.

இதில் பும்ப்ராவின் கால் க்ரீஸிற்கு வெளியே சென்றது தெள்ளத்தெளிவாக சென்றது. இதனால் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது, இதனால் பகர் சமான் 8 பந்தில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


சதம் அடித்த பகர் சமான்

60 பந்தில் 7 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்த பகர் சமான், 92 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். இது அவரின் முதல் சர்வதேச சதமாகும். தொடர்ந்து விளையாடிய அவர், 114 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

நோபாலால் 3 ரன்னில் இருந்து தப்பிய பகர் சமான் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

Similar News