செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி: பயிற்சியின்போது அஸ்வினுக்கு காயம்

Published On 2017-06-17 13:50 GMT   |   Update On 2017-06-17 13:50 GMT
இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் கேட்ச் பிடிக்கும் வகையில் அஸ்வினுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பந்தை பிடிக்கும்போது அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து வலி இருந்ததால் அவர் பயிற்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் அணி பிசியோ பாட்ரிக் பர்ஹார்ட் அவருக்கு சிகிச்சை அளித்தார். அதன்பின் சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார். அப்போது அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிரமப்பட்டதாக எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனால் நாளை அவர் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை.

கும்ப்ளே கண்காணிப்பின் கீழ் ஹர்திக் பாண்டியா, பும்ப்ரா ஆகியோர் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News