செய்திகள்

முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி

Published On 2017-06-10 10:49 IST   |   Update On 2017-06-10 10:49:00 IST
செயிண்ட் லூசியாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது.
செயிண்ட்லூசியா:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது.

ஜாவித் ஆட்டி 81 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பந்து வீச்சில் சிக்கி சின்னா பின்னமானது.



வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 149 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ரஷித் கான் 8.4 ஓவரில் 18 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் ஆப்கானிஸ்தான் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Similar News