செய்திகள்

20 ஓவர் கிரிக்கெட்டில் டக்வொர்த் விதி பொருத்தமற்றது: ஸ்டீபன் பிளமிங் கருத்து

Published On 2017-05-19 06:34 GMT   |   Update On 2017-05-19 06:34 GMT
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதி முறையை பின்பற்றுவது பொருத்தமற்றது என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

ஐதராபாத்:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியின் வெளியேற்றம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டம் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது.

முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்தது. கொல்கத்தா ஆட செல்லும் போது மழையால் பாதிக்கப்பட்டது. மழை விட்ட பிறகு விதி மாற்றத்தால் நள்ளிரவு 1 மணிக்கு போட்டி நடத்தப்பட்டது.

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 ஓவர்களில் 48 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை கொல்கத்தா எளிதில் எடுத்து ‘குவாலிபையர் 2’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

நள்ளிரவு 1.30 மணி வரை போட்டியை நடத்தியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கான விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஐதராபாத் அணியின் வெளியேற்றம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதி முறையை பின்பற்றுவது பொருத்தமற்றது என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டனும், ரைசிங் புனே அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

நான் ஏற்கனவே 20 ஓவர் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதி பின்பற்றப்படுவதை விமர்சித்து இருந்தேன். தற்போது அதே கருத்தை நான் மீண்டும் தெரிவிக்கிறேன்.

ஒரு நாள் போட்டியில் தொடர் (100 ஒவர்) டக்வொர்த்- லீவிஸ் விதி திருப்திகரமாக இருக்கும். 20 ஓவர் போட்டிக்கு (மொத்தம் 40 ஓவர்) சரியாக இருக்காது. இந்த விதியால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும்.

ஐதராபாத்- கொல்கத்தா போட்டியில் இது நன்றாக தெரிந்தது. இதனால் 20 ஓவர் ஆட்டத்துக்கு டக்வொர்த்-லீவிஸ் விதி பொருத்தமற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News