செய்திகள்

டி20 பிளாஸ்ட் லீக்: லங்காஷைர் அணியுடன் ஜெயவர்தனே ஒப்பந்தம்

Published On 2017-05-08 13:55 GMT   |   Update On 2017-05-08 13:55 GMT
இங்கிலாந்தின் ‘டி20 பிளாஸ்ட்’ கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட லங்காஷைர் அணியுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் கேப்டனாகவும், முன்னணி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் மகேலா ஜெயவர்தனே. 39 வயதாகும் இவர், 2014-ம் ஆண்டு இலங்கை அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வாங்க முக்கிய காரணமாக இருந்தார். டி20 கிரிக்கெட்டில் 5455 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். பாகிஸ்தான் நடத்தும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்காகவும், நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரில் சென்ட்ரல் ஸ்டேக்ஸ் அணிக்காவும் விளையாடி வருகிறார்.

தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடருக்காக லங்காஷைர் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. டி20 பிளாஸ்ட் தொடர் வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை நடக்கிறது. 2015-ம் ஆண்டு டி20 பிளாஸ்ட் தொடரை கைப்பற்றிய லங்காஷைர், கடந்த வருடம் குரூப் நிலையுடன் திருப்தியடைந்தது.
Tags:    

Similar News