செய்திகள்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஷரபோவா வெற்றி

Published On 2017-05-08 04:53 GMT   |   Update On 2017-05-08 04:53 GMT
ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை தோற்கடித்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட் :

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. ஊக்கமருந்து சர்ச்சையால் 15 மாத கால தடையை அனுபவித்த ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, இந்த போட்டியில் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஷரபோவா 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் பரோனியை வீழ்த்தினார். 2-வது சுற்றில் ஷரபோவா, கனடாவின் பவுச்சார்ட்டுடன் இன்று மோதுகிறார்.

பவுச்சார்ட் சமீபத்தில், ‘ஷரபோவா ஒரு மோசடி பேர்வழி. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய அவருக்கு வாழ்நாள் தடை விதித்திருக்க வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News