செய்திகள்

சிறப்பாக பந்து வீசியதற்காக லேப்டாப் பரிசு பெற்ற ஆர்.சி.பி. வீரர் சாஹல்

Published On 2017-04-13 12:12 GMT   |   Update On 2017-04-13 12:12 GMT
ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசியதற்காக பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் லேப்டாப்பை பரிசாக வென்றுள்ளார்.
ஐ.பி.எல். சீசன் 10 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. இந்த அணி விளையாடும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர் ஒருவருக்கு ஏசர் நிறுவனம் ஒரு லேப்டாப்பை பரிசாக கொடுக்க முடிவு செய்தது. அந்த வீரரை பயிற்சியாளர் வெட்டோரி தேர்வு செய்தார்.

பெங்களூரு அணி முதல் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 207 ரன்கள் குவித்தது. பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 172 ரன்கள் சேர்த்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.



பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும் சாஹல் நான்கு ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதனால் முதல் போட்டியில் சிறந்த வீரராக சாஹலை வெட்டோரி தேர்வு செய்தார். இவருக்கு ஏசர் நிறுவனம் லேப்டாப் பரிசாக வழங்கியது.

முதல் போட்டியில் பயிற்சியாளர் வெட்டோரி சாஹலை தேர்வு செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்! என்று ஆர்.சி.பி. அணி டுவிட் செய்துள்ளது.

Similar News