செய்திகள்

தரம்சாலாவில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளைப் படைத்த ஸ்மித்

Published On 2017-03-25 11:20 GMT   |   Update On 2017-03-25 11:20 GMT
தரம்சாலாவில் 20-வது சதத்தை பதிவு செய்ததன் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 111 ரன்னில் ஆட்டம் இழந்தார். இது அவருக்கு 20-வது சதம் ஆகும். இந்த சதம் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார் ஸ்டீவன் ஸ்மித்.

1. இந்தியாவில் ஒரே தொடரில் மூன்று சதங்கள் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலகளவில் 2-வது வீரராவார். இதற்கு முன் 2012-13 சீசனில் இங்கிலாந்தின் அலைஸ்டர் குக் மூன்று சதங்கள் அடித்திருந்தார்.

2. அதேபோல் இந்திய மண்ணில் ஒரே தொடரில் மூன்று சதங்கள் அடித்த 2-வது கேப்டன் ஸ்மித். இதற்கு முன் அலைஸ்டர் குக் கேப்டனாக இருக்கும்போதுதான் மூன்று சதங்கள் அடித்திருந்தார்.

3. 99 இன்னிங்சில் 20 சதங்களை விளாசியுள்ளார். இதற்கு முன் டான் பிராட்மேன் மட்டும்தான் 20 சதத்தை 55 இன்னிங்சில் கடந்திருந்தார். சுனில் கவாஸ்கர் மற்றும் ஹெய்டன் ஆகியோர் 95 இன்னிங்சில் அடித்திருந்தனர்.



4. இந்தியாவிற்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 7 சதங்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங், விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் 8 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

5. 19 இன்னிங்சில் இந்தியாவிற்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன் எவர்டன் வீக்ஸ் 14 இன்னிங்சில் 7 சதங்கள் அடித்துள்ளார். இந்தியாவைத் தவிர மற்ற எந்த நாட்டிற்கும் எதிராக ஸ்மித் ஐந்து சதங்களுக்கு மேல் அடித்தது கிடையாது.

6. இந்த சீசனில் வெளிநாட்டு கேப்டன்களில் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக், வங்காள தேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் இந்திய மண்ணில் சதம் அடித்திருந்தனர். தற்போது ஸ்மித் 3 சதங்கள் அடித்துள்ளார்.

7. இந்த தொடரில் புது மைதானமாக அறிமுகமான மூன்றிலும் (புனே, ராஞ்சி, தரம்சாலா) ஸ்மித் சதத்தை பதிவு செய்துள்ளார்.

Similar News