செய்திகள்

ராஞ்சி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 23/2; வார்னர், லயன் அவுட்

Published On 2017-03-19 12:58 GMT   |   Update On 2017-03-19 12:58 GMT
ராஞ்சி டெஸ்டில் ஆஸ்திரேலியா 4-வது நாள் ஆட்ட முடிவில் 23 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. வார்னர், நைட்வாட்ச்மேன் லயன் ஆட்டமிழந்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. புஜாரா, சகா ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவை விட 152 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இன்றைய நான்காவது நாளில் 8 ஓவரை சந்திக்க வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.  வார்னர், ரென்ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அஸ்வின் வீசினார். முதல் ஓவரில் வார்னர் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். 2-வது ஓவரை ஜடேஜா விசினார். இடது கை பந்து வீச்சாளர்களுக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை பிட்ச் செய்யும் இடத்தில் அதிக அளவில் கரடுமுரடாக ஆடுகளம் மாறியிருந்தது. இதனால் ஜடேஜாவிற்கு பந்து அதிக அளவில் டர்ன் ஆனது.

ஜடேஜா வீசிய 2-வது ஓவரின் நான்கு ரன்கள் எடுத்தனர். 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் வார்னர் ஒரு பவுண்டரி அடித்தார். 4-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 5-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 1 ரன் எடுக்கப்பட்டது.

6-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை அந்த கரடுமுரடான இடத்தில் (Rough) பிட்ச் செய்தார். வார்னர் காலை முன்னால் வைத்து ஆட முயற்சி செய்தார். பந்து பேட்டிற்கும், பேடிற்கும் இடையில் சென்று ஸ்டம்பை தாக்கியது.




இன்றைய நாளின் கடைசி ஓவரான 8-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் நைட்வாட்ச்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் ஸ்டம்பை பறிகொடுத்தார். அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போது ஆஸ்திரேலியா 129 ரன்கள் பின்தங்கியுள்ளது. ரென்ஷா 7 ரன்னுடன் களத்தில் உள்ளார். நாளை கடைசி நாளில் ரென்ஷாவுடன் ஸ்மித் ஜோடி சேர்வார். இந்த ஜோடியை விரைவில் பிரித்து விட்டால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் வார்னரைத் தவிர ரென்ஷா, ஷேன் மார்ஷ், வடே மற்றும் ஹசில்வுட் ஆகிய நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்கள் ஜடேஜா பந்தை எதிர்கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கும்.

Similar News