செய்திகள்
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் மேத்யூ ரென்ஷா.

பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாதியில் வெளியேறியது ஏன்?: ரென்ஷா விளக்கம்

Published On 2017-02-24 03:15 GMT   |   Update On 2017-02-24 03:15 GMT
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ரென்ஷா 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது வயிற்று உபாதை காரணமாக பாதியில் நடையை கட்டினார்.
புனே :

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ரென்ஷா 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது வயிற்று உபாதை காரணமாக பாதியில் நடையை கட்டினார். பிறகு 4-வது விக்கெட்டுக்கு மீண்டும் இறங்கி அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். இந்த சம்பவம் குறித்து 20 வயதான ரென்ஷா கூறியதாவது:-

வார்னர் ஆட்டம் இழப்பதற்கு 5 அல்லது 10 நிமிடங்களுக்கு முன்பு திடீரென வயிற்றை கலக்கியது. உடனே நடுவர் கெட்டில்போரப்பிடம் உணவு இடைவேளைக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கேட்டேன். அரைமணி நேரம் இருப்பதாக கூறினார்.



என்னால் சமாளிக்க முடியவில்லை. சங்கடத்தில் நெளிந்தேன். இப்படியொரு நிலைமை வந்து விட்டதே என்று எனக்கு நானே நொந்து கொண்டேன். உடல்நலக்குறைவால் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேற முடியுமா? அதற்கு விதியில் அனுமதி உண்டா? என்பது தெரியாது. எனது பிரச்சினையை கேப்டன் ஸ்டீவன் சுமித்திடம் கூறினேன். அதை கேட்டு அவர் ஆச்சரியப்படவில்லை. நிலைமையை புரிந்து கொண்டார். கழிவறைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது, சென்று தானே ஆக வேண்டும் என்று கூறினார். இதன் பின்னர் நடுவரிடம் பேசினோம்.

இருப்பினும் இது ஒரு சரியான சூழ்நிலையாக இருக்கவில்லை. அப்போது தான் நாங்கள் ஒரு விக்கெட்டை இழந்திருந்தோம். நானும் வெளியேறும் போது, ஒரே சமயத்தில் இரண்டு புதிய பேட்ஸ்மேன்கள் நெருக்கடியான சூழலை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால் வேறு வழியில்லை என்பதை கேப்டன் ஸ்டீவன் சுமித் உணர்ந்து கொண்டார். இதையடுத்து அவசரமாக வெளியேறினேன்.

இவ்வாறு ரென்ஷா கூறினார்.

Similar News