செய்திகள்

கேப்டனாக எனது மோசமான தோல்வி: இலங்கை கேப்டன் மேத்யூஸ் சொல்கிறார்

Published On 2017-01-15 10:54 GMT   |   Update On 2017-01-15 10:54 GMT
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது எனது கேப்டன் தலைமையில் மிகவும் மோசமானது என்கிறார் மேத்யூஸ்.
மேத்யூஸ் தலைமையிலான இளைஞர்களை கொண்ட இலங்கை அணி தென்ஆப்பி்ரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்து 0-3 என ஒயிட்வாஷ் ஆனது.

நேற்றுடன் முடிந்த கடைசி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த டெஸ்ட் மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.

இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறுகையில் ‘‘இலங்கை அணி தோல்வியுற்ற பல தொடர்களில் நான் இடம்பிடித்துள்ளேன். ஆனால், கேப்டனாக இந்த தோல்வி மிகவும் மோசமானது. நாங்கள் எந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறமோ அதைவிட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனது. பேட்ஸ்மேன்கள் மிகவும் ஏமாற்றம் அளித்தனர். என்னையும் சேர்த்து அனைத்து பேட்ஸ்மேன்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் நல்ல நிலையில்தான் ஆட்டத்தை தொடர்ந்தோம். ஆனால் அவற்றை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது. பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அதிக ரன்கள் குவிப்பது தேவையானது’’ என்றார்.

Similar News