செய்திகள்

35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடைபோடும் ரியல் மாட்ரிட்

Published On 2016-12-11 16:30 GMT   |   Update On 2016-12-11 16:30 GMT
ஷினேடின் ஷிடேன் தலைமையில் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணி 35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி ரியல் மாட்ரிட். பார்சிலோனா அணிக்கு இணையாக தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் பயிற்சியாளராக ஷினேடின் ஷிடேன் பதவி ஏற்றபின் ரியல் மாட்ரிட் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, பென்சிமா, கரேத் பேலே மற்றும் கேப்டன் ரமோஸ் ஆகியோர் அந்த அணிக்கு வெற்றிமேல் வெற்றியை தேடிக்கொடுத்து வருகிறார்கள்.

லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் டெபொர்டிவோ லா கொருனா அணியை எதிர்கொண்டது. இதில் கடைசி நேரத்தில் ரமோஸ் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 3-2 என த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது.

இதற்கு முன் ரியல் மாட்ரிட் 1988 அக்டோபர் முதல் 1989 ஏப்ரல் வரை தொடர்ச்சியாக 34 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதை தற்போது முறியடித்துள்ளது.

Similar News