செய்திகள்

மும்பை டெஸ்டில் ஆடும் லெவனில் பார்தீவ் பட்டேலுக்கு இடம்

Published On 2016-12-04 19:39 IST   |   Update On 2016-12-04 19:39:00 IST
சகா உடற்தகுதி பெறாத காரணத்தினால் மும்பையில் நடக்க இருக்கும் 4-வது டெஸ்டிலும் பார்தீவ் பட்டேல் இடம் பிடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது போட்டி மும்பையில் 8-ந்தேதி தொடங்குகிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டியின்போது விக்கெட் கீப்பர் சஹாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் மொகாலியில் நடைபெற்ற 3-வது போட்டியில் பார்தீவ் பட்டேல் சேர்க்கப்பட்டார். அவர் முதல் இன்னிங்சில் 42 ரன்களும், 2-வது இன்னிங்சில் 54 பந்துகளை சந்தித்து 67 ரன்களும் சேர்த்தார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பார்தீவ் பட்டேலுக்கு மும்பை டெஸ்டில் இடம்கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், தற்போது சகா தனது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் 8-ந்தேதி நடைபெற இருக்கும் 4-வது டெஸ்டில் பார்தீவ் பட்டேல் இடம்பெறுவர் உறுதி என தேர்வாளர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News