செய்திகள்

உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 8 வயது காஷ்மீர் சிறுமி

Published On 2016-11-15 19:10 IST   |   Update On 2016-11-15 19:10:00 IST
இத்தாலியில் நடைபெற்ற உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீரைச் சேர்ந்த 8 வயது சிறுமி தஜாமுல் இஸ்லாம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீநகர்:

8 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள அண்ட்ரியா நகரில் நடைபெற்றது.

இதில் ஜம்மு-காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்த தஜாமுல் இஸ்லாம் என்ற சிறுமி தங்கம் வென்று சாதனை படைத்தார். 5 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் உலகம் முழுவதும் 90 நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் 6 போட்டிகளில் வென்ற தஜாமுல் இறுதியாக தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இப்பிரிவில் தங்கம் வென்ற முதல் காஷ்மீர் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தாஜ்முல் கூறுகையில் "எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிற்காக தங்கம் வென்றது பெருமையளிக்கிறது" என்றார்.

Similar News