செய்திகள்

ஒருகால் ஷூவுடன் ஓடி தங்கம் வென்ற தமிழக வீராங்கனை

Published On 2016-11-15 09:01 IST   |   Update On 2016-11-15 09:01:00 IST
800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கவுதமி (வலது) ஒரு கால் ஷூவுடன் இலக்கை நோக்கி ஓடிய காட்சி.
கோவை :

32-வது தேசிய அளவிலான தடகளப்போட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நேற்று 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தை சேர்ந்த கவுதமி, சமயஸ்ரீ மற்றும் வெளிமாநில வீராங்கனைகள் கலந்து கொண்டு ஓடினர். அப்போது எதிர்பாராத விதமாக கவுதமியின் ஷூ கழன்றது. அதை பொருட்படுத்தாமல், ஒரு கால் ஷூவுடனே கவுதமி ஓடினார். அவருக்கும் சக வீராங்கனை சமயஸ்ரீக்கு கடும் போட்டி ஏற்பட்டது.

இந்த போட்டியில் கவுதமி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2 நிமிடம் 18 வினாடிகளில் இலக்கை எட்டினார். நூலிழையில் தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்ட சமயஸ்ரீ 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒரு கால் ஷூவுடன் ஓடி தங்கப்பதக்கம் வென்ற கவுதமியை அனைவரும் பாராட்டினர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்.

Similar News