செய்திகள்
இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ரித்து ராணி ஓய்வு அறிவிப்பு
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரித்து ராணி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரித்து ராணி தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றது. இதனால், 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் விளையாட இந்திய மகளிர் அணி தகுதி பெற்றது. ஆனால், ரித்து ராணி பார்மில் இல்லாததாலும் அவரது அணுகுமுறையை காரணம் காட்டியும் ஒலிம்பிக் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இருப்பினும், போபாலில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ள தேசிய முகாமிற்கான உத்தேச வீராங்கனைகள் பட்டியலில் ரித்து ராணி பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக ரித்து ராணி திடீரென அறிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் இருந்து தன்னை நீக்கியதால் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக அவர் ஓய்வு பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுபற்றி ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா கூறுகையில், “சர்வசேத போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், அதனால் தேசிய முகாமில் பங்கேற்க முடியாது என்றும் ரித்து ராணி எங்களுக்கு மெயில் அனுப்பினார். ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட முடிவு. அவரது இந்த முடிவிற்கு நாங்களும் ஹாக்கி இந்தியாவும் மரியாதை அளிக்கிறோம். விளையாட்டுக்கும் நாட்டிற்கும் அவர் செய்த சேவைகளுக்காக ஹாக்கி இந்தியா நன்றி தெரிவித்துக்கொள்கிறது” என்றார்.
ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ரித்து ராணி பாட்டியாலாவைச் சேர்ந்த பஞ்சாபி பாடகர் ஹர்ஷ் ஷர்மாவை ஆகஸ்ட் 18-ம் தேதி திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.