செய்திகள்

தேசிய தற்காப்புக்கலை போட்டி: டேக்வாண்டோ பிரிவில் மேகாலயாவுக்கு 20 பதக்கம்

Published On 2016-09-21 20:08 IST   |   Update On 2016-09-21 20:08:00 IST
தேசிய தற்காப்புக்கலை போட்டிகளில் மேகாலயாவின் 20 டேக்வாண்டோ வீரர்கள் பதக்கம் வென்றனர்.
ஷில்லாங்:

அசாம் மாநிலம் கவுகாத்தியில் தேசிய அனைத்து தற்காப்புக்கலை போட்டி நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களின் வீரர்-வீராங்கனைகளும் பங்கேற்றனர். கடந்த 16-ம் தேதி தொடங்கிய இப்போட்டி 18-ம்தேதி நிறைவுபெற்றது.

ஜீத் குனே-டோ, கிக் பாக்சிங், கராத்தே, டேக்வாண்டோ, உஷூ உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலை பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில், மேகாலயாவைச் சேர்ந்த டேக்வாண்டோ வீரர்கள் 5 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

தங்கம் வென்ற வீரர்களில் பயிற்சியாளர் ஓஸ்மாண்ட் டி சங்மா வின் மகன் அகதே சங்மாவும் ஒருவர். இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் விளையாடி பரிசு பெற்றுள்ளார்.

Similar News