செய்திகள்

சிந்துவின் விளம்பர மதிப்பு எகிறியது

Published On 2016-08-27 04:14 GMT   |   Update On 2016-08-27 04:14 GMT
ஒலிம்பிக் பதக்கத்தை உச்சி முகர்ந்ததன் மூலம் சிந்துவின் விளம்பர மதிப்பு இஷ்டத்துக்கு எகிறி இருக்கிறது.
ஐதராபாத்:

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான பி.வி.சிந்து ஒரேநாளில் புகழின் உச்சிக்கு சென்று விட்டதோடு மட்டுமின்றி கோடியிலும் கொழித்து வருகிறார்.

அவருக்கு தெலுங்கானா அரசு ரூ.5 கோடியும், ஆந்திர அரசு ரூ.3 கோடியும் ஊக்கத்தொகையாக வழங்கியது. டெல்லி அரசு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் அவருக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல பரிசு வழங்குவதாக தெரிவித்துள்ளன.

மேலும் பல தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தில் சிந்துவை ஒப்பந்தம் செய்ய வரிசையில் காத்து கிடக்கின்றன. ஒலிம்பிக் பதக்கத்தை உச்சி முகர்ந்ததன் மூலம் சிந்துவின் விளம்பர மதிப்பு இஷ்டத்துக்கு எகிறி இருக்கிறது. முன்பு லட்சங்களில் இருந்த அவரது விளம்பர ஒப்பந்தங்கள் தற்போது கோடியை தாண்டி இருக்கிறது. இதனால் சிந்துவின் விளம்பர விவகாரங்களை கவனித்து வரும் நிறுவனம் அவரது ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

Similar News