செய்திகள்

டுவிட்டரில் கேலி செய்த ரசிகருக்கு நறுக்கென பதிலளித்த சாய்னா

Published On 2016-08-19 17:22 IST   |   Update On 2016-08-19 17:22:00 IST
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்துவின் வெற்றியையடுத்து தன்னை டுவிட்டரில் கேலி செய்த ரசிகருக்கு சாய்னா நறுக்கென பதிலளித்து மன்னிப்பு கேட்க வைத்தார்.
ஐதராபாத்:

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து டுவிட்டரில் அவரை பாராட்டி ரசிகர்கள் செய்திகளை பதிவிட்டு வந்தனர். அதேசமயம் ரசிகர் ஒருவர், தோல்வியடைந்த நட்சத்திர வீராங்கனை சாய்னாவை கேலி செய்து டுவிட் செய்தார்.

அவர் தனது டுவிட்டரில் “டியர் சாய்னா.. உங்களுடைய பேக்கை மூட்டை கட்டுங்கள்.. சிறப்பான ஒருவரை எப்படி வீழ்த்துவது என்பதை தெரிந்த ஒருவரை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மனதில் ஆழ்ந்து பதியும்படியான ஒருபதிலை கொடுத்த சாய்னா, “கண்டிப்பாக நன்றி... சிந்து உண்மையாகவே சிறப்பாக விளையாடினார்... இந்தியா சிறப்பாக செயல்படுகிறது,” என்றார்.

இதனையடுத்து தவறை உணர்ந்துக் கொண்ட அந்த ரசிகர், “உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள்... சரியாக விளையாடவில்லை என்ற அர்த்தத்தில் நான் இதனை குறிப்பிடவில்லை. நான் இப்போதும் உங்களுடைய விளையாட்டை விரும்புகின்றேன்... நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன், “ என்றார்.

இதற்கு பதில் கூறிய சாய்னா, “ஒன்றும் பிரச்சனை இல்லை நண்பா, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து அந்த ரசிகருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது, ஆனால், அவரோ, தன்னுடைய மன்னிப்பை சாய்னா ஏற்றுக் கொண்டதால், யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துவிட்டார்.

Similar News