செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: வட்டு எறிதலில் இந்திய வீராங்கணை ஏமாற்றம்

Published On 2016-08-16 12:55 IST   |   Update On 2016-08-16 12:55:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு எறியும் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சீமா அண்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். அவர் தகுதி சுற்றில் 57.58 மீட்டர் தூரம் தாண்டி 20-வது இடத்தை பிடித்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றமே இருந்து வருகிறது.

பெண்களுக்கான வட்டு எறியும் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சீமா அண்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். அவர் தகுதி சுற்றில் 57.58 மீட்டர் தூரம் தாண்டி 20-வது இடத்தை பிடித்தார். அவர் கடந்த காலங்களில் 62.62 மீட்டர் தூரம் வரை வீசி இருந்தார். பிரேசிலில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சீமாவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

இதே போல சிரபானி நந்தா (200 மீட்டர்) ரஞ்சித் மகேஸ்வரி (டிரிபிள் ஜம்ப) ஆகியோரும் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.

3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள் சேஸ் ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை லலிதா பார்பர் 10-வது இடத்தை பிடித்தார்.

தடகளத்தில் முகமது அனாஸ், ஜின்சன் ஜான்சன், அங்கீட் சர்மா, விகாஸ் கவுடா, டுட்டி சந்த், நிர்மலா, சுதாசிங், மன்பிரித் கவூர் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேற்றப்பட்டனர்.

Similar News