செய்திகள்

சாதனைக்கு உயரம் பெரிதல்ல என்பதை நிருபித்த மைக்கேல் பெல்ப்ஸ்,சிமோன் பைல்ஸ்

Published On 2016-08-16 09:18 IST   |   Update On 2016-08-16 09:18:00 IST
சாதனைக்கு உயரம் பெரிதல்ல என்பதை நிருபித்ததில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் ஆகியோருக்கு முக்கிய இடம் உண்டு.
ஒலிம்பிக்கில் இந்த முறை அதிகம் கவர்ந்தவர்களில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் ஆகியோருக்கு முக்கிய இடம் உண்டு. பெல்ப்ஸ், ரியோ ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்றதுடன் விடைபெற்றார்.

அதே சமயம் அறிமுக ஒலிம்பிக்கிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் களத்தில் பம்பரமாக சுழன்று வரும் 19 வயதான சிமோன் பைல்ஸ் இதுவரை 3 தங்கத்தை வென்று பிரமிக்க வைத்துள்ளார். ஆனால் பெல்ப்சின் அருகில் நிற்கும் போது சிமோன் பைல்ஸ் சின்ன குழந்தை மாதிரி காட்சி அளிக்கிறார். இவரா அந்தரத்தில் துள்ளி குதித்து அதிசயிக்க வைக்கிறார் என்ற ஆச்சரியமும் மேலோங்குகிறது. இருவரும் ஒன்றாக நிற்கும் படங்கள் சமுக வலை தளங்களில் இப்போது அதிகமாக உலா வருகிறது.

Similar News