செய்திகள்

ஒலிம்பிக் பதக்கமேடையில் கனிந்த காதல்

Published On 2016-08-16 08:52 IST   |   Update On 2016-08-16 08:53:00 IST
ஒலிம்பிக் பதக்கமேடையில் சீன வீராங்கனைக்கும், சக வீரருமான கின் காய்க்கும் நிச்சயதார்த்தம் நடந்தேறியது.
இந்த ஒலிம்பிக் திருவிழாவில் அவ்வப்போது திடீர் வினோதங்களும் நடக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு பிரேசில் ஓரினசேர்க்கை ஜோடி மைதானத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.

இந்த நிலையில் பதக்கம் மேடையில் நேற்று முன்தினம் ஒரு திருமண நிச்சயதார்த்தம் அரங்கேறியது.

ரியோ ஒலிம்பிக் ‘டைவிங்’ போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹி ஜி பதக்க மேடையில் நின்ற போது, அவரது நீண்ட கால நண்பரும், சக வீரருமான கின் காய் திடீரென தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி மோதிரத்துடன் மண்டியிட்டார்.

ஆனந்த கண்ணீர் மல்க அதை ஏற்றுக்கொண்ட ஹி ஜி, வெட்கத்துடன் தலையசைக்க அந்த கணமே அங்கு மோதிரம் கைமாற நிச்சயதார்த்தம் நடந்தேறியது.

Similar News