செய்திகள்

ஒலிம்பிக் டென்னிஸ்: தோல்வின் வேதனையை தாங்க முடியாமல் கண்ணீர் விட்ட சானியா மிர்சா

Published On 2016-08-16 08:42 IST   |   Update On 2016-08-16 08:42:00 IST
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்த சானியா மிர்சா தோல்வியின் வேதனையை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
ரியோ டி ஜெனீரோ:

ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் செக்குடியரசு ஜோடியிடம் தோற்று பதக்கத்தை கோட்டை விட்டது. தோல்வியின் வேதனையை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத சானியா மிர்சா, கண்ணீரை அடக்குவதற்கு பெரும்பாடு பட்டார்.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நிருபர்களிடம் பேசிய 29 வயதான சானியா, ‘இது கடினமான தருணம். என்னால் அதிகம் பேச முடியவில்லை. ஆனாலும் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து வெளியே வர வேண்டும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. எனவே 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் என்னால் பங்கேற்க முடியுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது’ என்றார்.

சுதந்திர தின பரிசாக பதக்கத்தை நாட்டுக்கு அளிக்க முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News