செய்திகள்
தடகளத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றம் தொடருகிறது
ரியோ ஒலிம்பிக்கில் 10-வது நாளான நேற்றும் தடகள போட்டியில் இந்தியாவிற்கு ஏமாற்றமே தொடர்ந்தது.
ரியோ டி ஜெனீரோ :
ரியோ ஒலிம்பிக்கில் 10-வது நாளான நேற்று தடகள போட்டியில் ஏமாற்றம் தொடர்ந்தது. பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் உள்பட 18 பேர் கலந்து கொண்டனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2-வது இந்திய தடகள வீராங்கனை என்ற பெருமைக்குரிய லலிதா பாபர் பந்தய தூரத்தை 9 நிமிடம் 22.74 வினாடியில் கடந்து 10-வது இடத்தையே பிடித்தார். இந்த போட்டியில் பக்ரைன் வீராங்கனை ரூத் ஜெபெத் 8 நிமிடம் 59.75 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் வழக்கம் போல் இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரி இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் நடையை கட்டினார். 48 வீரர்கள் பங்கேற்ற இந்த பந்தயத்தில் ரஞ்சித் மகேஸ்வரி 16.13 மீட்டர் தூரம் தாண்டி 30-வது இடம் பிடித்தார். ஒலிம்பிக் தகுதிக்கான இந்திய கிராண்ட்பிரீ போட்டியில் ரஞ்சித் மகேஸ்வரி 17.30 மீட்டர் தூரம் தாண்டி இருந்தார்.
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை ஸ்ரபானி நந்தா 23.58 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார். 77 பேர் பங்கேற்ற இந்த பந்தயத்தில் ஸ்ரபானி நந்தாவுக்கு 55-வது இடம் கிடைத்தது.