செய்திகள்

ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ்: இந்தியாவின் சானியா-போபண்ணா இணை அரையிறுதிக்குள் நுழைந்தது

Published On 2016-08-13 06:17 IST   |   Update On 2016-08-13 06:17:00 IST
ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா-போபண்ணா இணை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
ரியோ:

ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன்போபண்ணா இணை காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆண்டி முர்ரே-ஹீதர் வாட்சன் இணையை எதிர் கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சானியா-போபண்ணா இணை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் இந்த இணை நுழைந்துள்ளது.

இதனிடையே, மிடில் வெயிட் 75 கிலோ எடைபிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துருக்கியின் ஒண்டெர் சிபலை எதிர் கொண்டார்.

இந்தப் போட்டியில் விகாஸ் கிருஷ்ணன் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Similar News