செய்திகள்

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா-கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது

Published On 2016-08-13 00:29 IST   |   Update On 2016-08-13 00:29:00 IST
ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில், இந்தியா கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ரியோ:

ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி கனடாவை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இந்திய வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சியை கனடாவின் தடுப்பாட்டக்காரர் அற்புதமாக தடுத்தார்.


இரண்டாவது பாதி தொடங்கிய 8-வது நிமிடத்தில், இந்திய அணியின் ஆகாஷ் தீப் தான் தனது முதல் கோலினை அடித்தார். அவரை தொடர்ந்து இரண்டே நிமிடங்களில் கனடா அணியின் கேப்டன் ஸ்காட் டுப்பெர் ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.

பின்னர் இந்தியா வீரர் ராமன் தீப் ஒரு கோல் அடிக்க இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. பின்னர் கனடா அணியின் கேப்டன் மீண்டும் ஒரு கோல் அடித்து 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதனால் பி பிரிவில் நடைபெற்ற இந்தியா கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்ததால் சமனில் முடிந்தது.

Similar News