செய்திகள்
ரியோ ஒலிம்பிக்: ஜூவாலா கட்டா- அஸ்வின் பொன்னப்பா ஜோடி, மன்பிரித் கவுர் வெளியேற்றம்
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி ஜோடியான ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெளியேறியது. அதேபோல் குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரித் கவுரும் ஏமாற்றம் அளித்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஜோடியான ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி நேற்று தனது முதல் ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை எதிர்கொண்டது. ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 15-21, 10-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது.
இன்று நெதர்லாந்து ஜோடியிடம் மோதியது. அடுத்த சுற்றான காலிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று நிலையில் களம் இறங்கியது.
ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடிக்கு நெதர்லாந்தின் பைக் - மஸ்கன் ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது. 19 நிமிடங்கள் நீடித்த முதல் செட்டை இந்திய ஜோடி 16-21 என இழந்தது. 2-வது சுற்றில் 21-16 பதிலடி கொடுத்து அசத்தியது. ஆனால், வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது சுற்றை 17-21 என இழந்ததால் காலிறுதி வாய்ப்பை இழந்தது.
நாளை தாய்லாந்து அணியுடன் இந்திய ஜோடி மோதுகிறது. இந்த போட்டியின் முடிவு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தடகளத்தில் பெண்களுக்கான குண்டு எறிதல் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை மன்பிரித் கவுர் கலந்து கொண்டார். பி பிரிவில் இடம்பிடித்திருந்த இவருக்கு மூன்று வாய்ப்பு வழங்கப்பட்டது. 2-வது வாய்ப்பில் 17.06 மீட்டர் தூரம் வீசினார். இதன்மூலம் பி பிரிவில் 13-வது இடம் பிடித்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.
ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டியானா ஸ்வானிட்ஸ் முதல் வாய்ப்பிலேயே 19.18 மீட்டர் தூரம் வீசி முதல் இடம் பிடித்தார். சீன வீராங்கனை லிஜியாவோ காங் 18.74 மீட்டர் தூரம் வீசி 2-வது இடமும், ஹங்கேரி வீராங்கனை 18.51 மீட்டர் தூரம் வீசி 3-வது இடம் பிடித்தார்.
இவர்கள் மூன்று பேரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள்.