செய்திகள்
800 மீட்டர் ஓட்டப் பந்தயம்: தகுதிச் சுற்றில் ஜின்சன் ஜான்சன் தோல்வி
ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
ரியோ ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் இன்று தொடங்கியது. முதலில் 800 மீட்டர் ஓட்டத்திற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. மொத்தம் 5 பிரிவுகளாக (ஹீட்) வீரர்கள் பிரிக்கப்பட்டு தகுதிச் சுற்று நடைபெற்றது.
இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் 3-வது பிரிவில் இடம்பிடித்திருந்தார். இவருடன் மேலும் 8 வீரர்கள் இடம்பிடித்தனர். விசில் அடித்ததும் வீரர்கள் சீறிப்பாய்ந்தார்கள். இறுதியில் ஜான்சனால் 5-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் ஜான்சனின் ஒலிம்பிக் பதக்கம் கனவு தகர்ந்தது.
கென்யா வீரர் லெகுடா ருடிஷா பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 45:09 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். தென்ஆப்பிரிக்க வீரர் ரைனார்ட் வான் ரென்ஸ்பர்க் ஒரு நிமிடம் 45:67 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தையும், பிரிட்டன் வீரர் மைக்கேல் ரிம்மெர் ஒரு நிமிடம் 45:99 வினாடிகளில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். இந்த மூன்று பேரும் அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.
அமெரிக்க வீரர் கிளெய்டன் மர்ஃபி ஒரு நிமிடம் 46:18 வினாடிகளில் கடந்து 4-வது இடத்தையும், இந்திய வீரர் ஜான்சன் ஒரு நிமிடம் 47:27 வினாடிகளில் கடந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.