செய்திகள்
ரியோ ஒலிம்பி்க்கில் பங்கேற்ற சீன வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிப்பு
ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட சீன நீச்சல் வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை அந்தந்த நாட்டு ஒலிம்பிக் அமைப்பு மற்றும் விளையாட்டுக்கான அமைப்பு பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளும்.
அதன்படி சீன நாட்டின் 18 வயது வீராங்கனை சென் ஜின்யி பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் கலந்து கொண்டார். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தார்.
இறுதிப் போட்டியில் நான்காவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இவரது மாதிரியை சீன நீச்சல் அசோசியேசன்ஸ் பரிசோதனை செய்தது. அதில் சென் ‘ஹைட்ரோகுளோரோதயஸைட்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.
சென் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் தனது ‘பி’ மாதிரி முடிவை கேட்டுள்ளார். ரியோவில் கலந்து கொண்ட ஒரு வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.