செய்திகள்

ஒலிம்பிக்கில் போட்டியில் வில்வித்தையில் தென்கொரிய வீரர் உலக சாதனை

Published On 2016-08-06 08:10 IST   |   Update On 2016-08-06 08:10:00 IST
ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில், தென்கொரிய வீரரும், உலக சாம்பியனுமான கிம் வூ ஜின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில், ரேங்கிங் சுற்று நேற்று நடந்தது. இதில் தென்கொரிய வீரரும், உலக சாம்பியனுமான கிம் வூ ஜின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

துல்லியமாக செயல்பட்ட அவர் 72 முறை அம்பு எய்தும் சுற்றில் மொத்தம் 700 புள்ளிகள் குவித்து அசத்தினார். இதற்கு முன்பு லண்டன் ஒலிம்பிக்கில் சக நாட்டவர் இம் டோங் ஹியூன் இந்த பிரிவில் 699 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

அதை முறியடித்த 24 வயதான கிம் வூ ஜின், உலக சாதனை படைத்தது முக்கியமானது தான். ஆனால் அதை விட நாளைய (இன்று) ஆட்டங்கள் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

Similar News