செய்திகள்
பிபா கால்பந்து தரவரிசை: பிரான்ஸ், வேல்ஸ் முறையே 10, 15 இடங்கள் முன்னேற்றம்
பிபா கால்பந்து தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் யூரோ கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் 10 இடங்களும், வேல்ஸ் 15 இடங்களும் முன்னேறியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் முடிவடைந்தது. இந்த தொடரில் போர்ச்சுக்கல் முதன்முறையாக கோப்பையை வென்றது. போட்டியை நடத்திய பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கத்துக்குட்டி அணியான வேல்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதிக்கு முன்னேறியதால் பிபா தரவரிசையில் வேல்ஸ் அணி மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்குமுன் வேல்ஸ் அணி 26-வது இடத்தில் இருந்தது. இன்று வெளியிடப்பட்ட பிபா தரவரிசை பட்டியலில் 15 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளது.
யூரோ கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் 10 இடங்கள் முன்னேறி 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கோபா அமெரிக்காவில் தோல்வியடைந்த அர்ஜென்டினா முதல் இடத்திலேயே நீடிக்கிறது. பெல்ஜியம், கொலம்பியா, ஜெர்மனி, சிலி ஆகிய அணிகள் முறையே 2-வது இடம் முதல் 5-வது இடம் வரை பிடித்துள்ளன.
யூரோ கோப்பையை வென்ற போர்ச்சுக்கல் 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளது. யூரோ கோப்பையில் ஜொலிக்காத ஸ்பெயின் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடத்திற்கும், கோபா அமெரிக்காவில் லீக் சுற்றுடன் வெளியேறிய பிரேசில் 2 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. இத்தாலி 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளது.
குரோஷியா 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 11 இடங்கள் முன்னேறி 152-வது இடத்தை பிடித்துள்ளது.