செய்திகள்

டூயல் கேமரா, ஆக்டாகோர் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2017-12-06 09:46 IST   |   Update On 2017-12-06 09:46:00 IST
ஹூவாய் ஹானர் பிரான்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
லண்டன்:

ஹூவாய் ஹானர் பிரான்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7X ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5.93 இன்ச் ஃபுல் எச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 659 பிராசஸர், 16 எம்பி + 2 எம்பி டூயல் பிரைமரி கேமரா, மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள ஹானர் 7X ஸ்மார்ட்போன் 3340 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



ஹானர் 7X சிறப்பம்சங்கள்:


- 5.93 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 659 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் EMUI 5.1
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி கேமரா, எல்இடி பிளாஷ் + 2 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3340 எம்ஏஎச் பேட்டரி

கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் ஹானர் 7X 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.12,999 மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 7X விற்பனை டிசம்பர் 7-ம் தேதி 12.00 மணிக்கு துவங்குகிறது.

Similar News