செய்திகள்

ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன்: விரைவில் வெளியாகும் என தகவல்

Published On 2017-12-03 09:58 IST   |   Update On 2017-12-03 09:58:00 IST
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் வெளியாக இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வராம் வெளியிடப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற காமிக் ஆன் 2017 நிகழ்வில் இத்தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்தது. இத்துடன் புதிய லிமிட்டெட்ட எடிஷன் ஒன்பிளஸ் 5T போனின் டீசர் புகைப்படத்தையும் வெளியிட்டது. புகைப்படத்தில் லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் தீம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.



புதிய ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் கிரிம்சன்-ஹியூ செய்யப்பட்ட ஸ்டார் வார்ஸ் பின்புறமும், இடது புறத்தில் அலெர்ட் ஸ்லைடர், பவர் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவற்றில் லோகோ இடம்பெற்றுள்ளது. போனின் மற்ற பகுதிகளில் பிளாக் ஷெல் ஸ்னோ வைட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவிலும் வால்பேப்பர் தீம் ஸ்டார் வார்ஸ் தீம் கொண்டுள்ளது.

வடிவமைப்பை தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் மாற்றமும் செய்யப்படவில்லை. ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் லிமிட்டெட் எடிஷன் விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை அடுத்த வாரம் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் 16-ம் தேதி ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் திரைப்பட வெளியீட்டிற்கு முன்னரே ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:


- 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
- 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவை முறையே ரூ.32,999 மற்றும் ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. முன்னதாக ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் லாவா ரெட் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News