செய்திகள்
டூயல் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஃபிளிப் வசதி மற்றும் டூயல் டிஸ்ப்ளே கொண்ட பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பீஜிங்:
சாம்சங் நிறுவனம் W2018, தனது புதிய பிரீமியம் ஆண்ட்ராய்டு ஃபிளிப் போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் கால்பதித்து 25 ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4.2 இன்ச் 1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருப்பதால், ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் பயன்படுத்த முடியும். இத்துடன் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5 அப்ரேச்சர், f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
3D கிளாஸ் மற்றும் மெட்டல் வடிவமைப்பு, கீபோர்டில் மல்டி-ஃபன்க்ஷன் ஹாட்கீ வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிளாக்ஷிப் 8 போன்ற வடிவமைப்புகளை கொண்டுள்ளது. ஃபிளாக்ஷிப் 8 ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனர் கேமராவின் கீழ் வழங்கப்பட்ட நிலையில், புதிய ஃபிளிப் ஸ்மார்ட்போனில் கேமராவிற்கு அருகிலேய் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் W2018 சிறப்பம்சங்கள்:
- 4.2 இன்ச் 1920x1080 பிக்சல் சூப்பர் AMOLED டூயல் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.5 அல்லது f2.4 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர், இதயதுடிப்பு சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2300 எம்ஏஎச் பேட்டரி
கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் சாம்சங் W2018 ஸ்மார்ட்போன் சைனா டெலிகாம் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும் இதன் விலை மற்றும் விற்பனை தேதி சார்ந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.